MARC காட்சி

Back
அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்
245 : _ _ |a அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில் -
246 : _ _ |a தொறையாத்தம்மன் ஆலயம்
520 : _ _ |a

சென்னை-திருவள்ளூர் சாலையில் திருமழிசை அடுத்து வெள்ளவேடு. இடதுபுறம் திரும்ப, குத்தப்பாக்கம் தாண்டினால் உட்கோட்டை கிராமம் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உட்கோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தொறையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அடர்ந்த வீடுகளடங்கிய குறுகிய தெரு வழியே பயணித்தால், புதிதாய் கட்டப்பட்ட அம்மன் கோவிலருகே பாதை முடிந்து விடுகிறது. பின் வேலியிட்ட தோட்டத்தினூடே ஒற்றையடிப் பாதையில் சென்றால், உட்கோட்டை கிராம தொறையாத்தம்மன் கோயில் கற்றளியாய் காட்சியளிக்கிறது. இக்கோயிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், கருவறையில் தொறையாத்தம்மன் ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன.

653 : _ _ |a தொறையாத்தம்மன், அம்மன் கோயில், உட்கோட்டை, திருவள்ளுர், கிராமத்துக் கோயில், நாட்டுப்புறக் கோயில், சிறுகோயில், பெண் தெய்வம்
700 : _ _ |a சென்னை சேவாஸ் பாண்டியன்
710 : _ _ |a சென்னை சேவாஸ் பாண்டியன்
905 : _ _ |a கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 3
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது. நாட்டுப்புற பெண் தெய்வத்திற்கு எடுப்பிக்கப்பட்ட கற்றளி
914 : _ _ |a 13.0675051
915 : _ _ |a 80.0356028
918 : _ _ |a தொறையாத்தம்மன்
922 : _ _ |a வேப்பமரம்
923 : _ _ |a இரு குளங்கள்
925 : _ _ |a இருகால பூசை
926 : _ _ |a ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா
927 : _ _ |a கருவறை விமானத்தின் தாங்குதளத்தின் உறுப்புகளான ஜகதியிலும், குமுதத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a உண்ணாழிகையினுள் கிழக்கு பார்த்தவாறு தொறையாத்தம்மன் காட்சியளிக்கிறார். உடன் அன்னையர் எழுவர் உள்ளனர். வடக்கு பார்த்தவாறு விநாயகரும், தென்முகக் கடவுளும் பழங்காலப் பெருவுரு சிலைகளாக அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. தெற்கில் காலபைரவருக்கு தனியே சிறுகோயில் உள்ளது. பலிபீடத்தின் எதிரேயுள்ள கல்மேடையில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக உடைந்த அம்மன் சிலையின் தலை மட்டும் உள்ளது.
930 : _ _ |a செல்லியம்மனுக்கு கூறப்படும் தலபுராணம் தொறையாத்தம்மனுக்கும் விளங்குகின்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
932 : _ _ |a இக்கோயில் கற்றளியாக விளங்குகின்றது. உபபீடம் மற்றும் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரையே தற்போது காட்சியளிக்கிறது. விமானத்தின் அமைப்பு அறியக்கூடவில்லை. விமானத்தின் தளப்பகுதி சுதையால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். எனவே சிதைவுற்றிருக்கலாம். விமானமற்ற திருவுண்ணாழிகை சதுர வடிவில் அமைந்துள்ளது. உண்ணாழிகையினுள் கிழக்கு பார்த்தவாறு தொறையாத்தம்மன் காட்சியளிக்கிறார். உடன் அன்னையர் எழுவர் உள்ளனர். அர்த்த மண்டபத்தினைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய சிறு முக மண்டபம் உள்ளது. எதிரே பெரிய பலி பீடம். வடக்கு பார்த்தவாறு விநாயகரும், தென்முகக் கடவுளும் பழங்காலப் பெருவுரு சிலைகளாக அமைந்துள்ளன.கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தெற்கில் காலபைரவருக்கு தனியே சிறுகோயில் உள்ளது. எதிரில் ஒரு கல் மேடை. மேடையில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக உடைந்த அம்மன் சிலையின் தலை மட்டும் உள்ளது. கோயிலின் வடமேற்கிலும் , வடகிழக்கிலும் அழகிய குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்நீர்த்துறைகளின் கரைகளில் அமைந்ததாலோ இப்பெண் தெய்வத்திற்கு துறையாற்று அம்மன் எனப்பெயர் வழங்கியிருக்க வேண்டும். பின்பு தொறையாத்தம்மன் என மருவியிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.
933 : _ _ |a உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருமழிசை பெருமாள் கோயில், குத்தப்பாக்கம் கோயில், நேமம் கோயில்
935 : _ _ |a சென்னை-திருவள்ளூர் சாலையில் திருமழிசை அடுத்து வெள்ளவேடு. இடதுபுறம் திரும்ப, குத்தப்பாக்கம் தாண்டினால் உட்கோட்டை கிராமம் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உட்கோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தொறையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 10.00 மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 வரை
937 : _ _ |a உட்கோட்டை, வெள்ளவேடு
938 : _ _ |a திருவள்ளுர்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருவள்ளுர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TMP_000116
barcode : TVA_TMP_000116
book category : நாட்டுப்புறத் தெய்வம்
Primary File :

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-முகப்பு-0002.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-முன்புறத்-தோற்றம்-0003.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-மண்டபம்-வெளித்தோற்றம்-0004.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-மண்டபம்-வெளித்தோற்றம்-0005.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-சுவர்-அமைப்பு-0006.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோயில்-சுவர்-தூண்கள்-அமைப்பு-0007.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-தாங்குதளம்-0008.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-உபபீடம்-0009.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-தேவகோட்டம்-0010.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-கல்வெட்டு-0011.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-கல்வெட்டு-0012.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கருவறை-விமானம்-கல்வெட்டு-0013.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_கோமுகி-0014.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_பலிபீடம்-0015.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_சடங்குக்கல்-0016.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_சிறுதெய்வங்கள்-0017.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_பைரவர்-0018.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_தலமரம்-0019.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_முன்புறத்-தோற்றம்-0020.jpg

TVA_TEM_000116/TVA_TEM_000116_உட்கோட்டை_தொறையாத்தம்மன்-கோயில்_வரைபடம்-0021.jpg